×

கொல்கத்தா-பஞ்சாப் இன்று மோதல்: 2வது வெற்றி யாருக்கு?

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 8வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா முதல்போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்திய நிலையில், 2வது போட்டியில் பெங்களூருவிடம் போராடி தோற்றது. அந்த அணியின் பவுலிங் வலுவாக உள்ள நிலையில் பேட்டிங்கில் வெங்கடேஷ், ரானா பார்மில் இல்லை.மறுபுறம் பஞ்சாப் ,பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் 205 ரன்னை சேசிங் செய்து வென்ற உற்சாகத்தில் உள்ளது.

கேப்டன் மயங்க் அகர்வால், தவான், ஷாருக்கான் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். இருஅணிகளும் 2வது வெற்றிக்கு மல்லுக்கட்டுவதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 19ல் கொல்கத்தா, 10ல் பஞ்சாப் வென்றுள்ளன.

Tags : Kolkata ,Punjab , Kolkata-Punjab, clash, IPL
× RELATED கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு?