×

அதிகரிக்கும் பதற்றம்!: ரஷ்யா மீது முதல்முறையாக ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன் ராணுவம்.. எரிபொருள் சேமிப்பு கிடங்கு துவம்சம்..!!

கீவ்: உக்ரைன் ராணுவம் முதல்முறையாக ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. உக்ரைனின் எல்லையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் ரஷ்யாவிற்குள் இருக்கும் பெல்கொராட் என்ற இடத்தில் ஏராளமான எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் இருக்கின்றன. நேற்று இரவு அங்குள்ள கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 100 அடிக்கு மேலாக நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. முதலில் அது ஒரு விபத்தாக இருக்கக்கூடும் என கூறப்பட்டது. ஆனால் உக்ரைன் ராணுவத்தினர் ஏவுகணை வீசி எரிபொருள் கிடங்கை தகர்த்தது ஆய்வில் தெரியவந்திருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

ஏவுகணை ஒன்று மின்னல் வேகத்தில் எரிபொருள் கிடங்கை தாக்கும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு பிறகு உக்ரைன் அரசுக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் எரிபொருள் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியிருப்பதை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் உக்ரைன் முழுவதுமாக பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.


Tags : Russia , Russia, missile attack, Ukrainian army
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...