×

மறைமலைநகரில் சம்பள உயர்வு கேட்டு தனியார் கம்பெனி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செங்கல்பட்டு: மறைமலைநகரில் இயங்கி வரும் பாலிதீன் கவர் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150 தொழிலாளர்கள் தினமும் 2 ஷிப்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள், ஊதிய உயர்வு வழங்க கோரி நிர்வாகத்தில் முறையிட்டு வருகின்றனர். இந்நிலையில், 30 சதவீத சம்பள உயர்வு கேட்டு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நிர்வாக தரப்பினர் கூறுகையில், ‘ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் முறையான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, சம்பள உயர்வு கேட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அவர்கள் கேட்பது ரூ.12 ஆயிரம். எங்களால் ரூ.11 ஆயிரம் தர முடியும் என்று ஒப்பு கொண்டுள்ளோம். அதனால் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதை பேசி தீர்ப்பதை விட்டுவிட்டு, மற்ற ஊழியர்களையும் வேலை செய்ய விடாமல் தடுப்பது சட்டப்படி குற்றமாகும். சட்டத்திற்கு புறம்பானது’ என்றனர். இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், போராட்டம் நீடிக்கிறது. அதே நேரத்தில் சம்பள உயர்வு தொகை ரூ.12 ஆயிரம் வழங்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும்’ என ஊழியர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : Maraimalai Nagar , In Maraimalai, pay rise, private company, employees, struggle
× RELATED மறைமலைநகர் மாருதி சபா ஆலயத்தில் கொடிமரம் அமைத்து கும்பாபிஷேகம்