×

மயிலாடும்பாறை -மல்லபுரம் மலைச்சாலையை சீரமைத்து தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

வருசநாடு : தேனி-மதுரை மாவட்டங்களை இணைக்கும் சாலை மயிலாடும்பாறை-மல்லபுரம் மலைச்சாலை ஆகும். இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இப்பகுதியில் தினந்தோறும் மாணவர்கள் மல்லப்புரம் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்கள் செல்லுகின்ற பொழுது இடதுபுறம், வலதுபுறம் மலைகளின் சாலையில் ஆங்காங்கே சறுக்கு ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றது.

சிலவேளைகளில் வாகனங்கள் தடுமாறி மலைகளில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக வருசநாடு பகுதி பொதுமக்கள் வனத்துறை சார்பாக மலப்புரம் சாலையை சீரமைக்க கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மயிலாடும்பாறை பகுதிகளில் விளைகின்ற விவசாய விலை பொருட்களான தக்காளி ,அவரை, பீன்ஸ் ,கொத்தவரை, பூசணி ,போன்ற காய்கறி பயிர்களை உசிலம்பட்டி, பேரையூர், சிவகங்கை, திருநெல்வேலி ,போன்ற பகுதிகளுக்கு மலப்புரம் மலைச் சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். இந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் விவசாய பொருட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வருசநாடு பகுதி விவசாயிகள் கூறுகையில், வருசநாடு பகுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பேரையூர், மலப்புரம், பகுதிகளுக்கு செல்கிறது.இந்த மலைச்சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. ஆங்காங்கே தடுப்புச்சுவர் கட்டாமல் இருப்பதினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : Mayiladuthurai-Mallapuram hill road , Varusanadu: The road connecting Theni-Madurai districts is the Mayiladuthurai-Mallapuram mountain road. Daily on this road
× RELATED மயிலாடும்பாறை-மல்லபுரம் மலைச்சாலையை...