×

அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து நடனமாடும் சம்பந்தர் உள்பட 13 இந்திய சிலைகள் மீட்பு!: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி..!!

டெல்லி: அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருந்து 13 இந்திய சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்திய கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்கள் ஆகியவை தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் இந்திய கலைப்பொருட்கள் மீட்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது அமெரிக்காவில் உள்ள ஏல் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கக்கூடிய அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து இன்று சுமார் 13 இந்திய சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கப்பட்டவை என தகவல் வெளியாகியிருக்கிறது.

சுபாஷ் கபூரின் விற்பனை கூடத்தில் இருந்து நேரடியாகவும், அன்பளிப்பாகவும் பெறப்பட்டு இருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. மீட்கப்பட்ட சிலைகளில் தமிழக கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சோழர் காலத்து நடனமாடும் சம்பந்தர் சிலையும் ஒன்று. இந்த சிலையை சுபாஷ் கபூர் அமெரிக்காவுக்கு கடத்தியதோடு மட்டுமின்றி, அமெரிக்காவில் சுபாஷ் கபூர் நடத்திய அருங்காட்சியகத்தில் வைத்து விற்பனை செய்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இந்த 13 சிலைகள் மீட்கப்பட்டிருப்பது சிலை மீட்கும் நடவடிக்கையில் ஒரு திருப்பம் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Tags : Sambandar , American Museum, 13 Indian Statues, Recovery
× RELATED அதே சீர்காழி, அதே நிகழ்வு,ஆனால் வேறு சம்பந்தர்.