வன்னியர் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறிய 6 காரணங்கள் தவறானவை: அன்புமணி ராமதாஸ்

சென்னை: வன்னியர் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறிய 6 காரணங்கள் தவறானவை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். தமிழநாடு அரசு மற்றும் பாமக உள்ளிட்டோர் தாக்கல் செய்த 10.5 சதவீதம் வன்னியர் உள்ஒதுக்கீடு வழக்கில் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அன்புமணி ராமதாஸ், வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு வருத்தமளிக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பில் 6 காரணங்கள் தவறு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற, அளித்த தீர்ப்பில் ஒரே ஒரு காரணத்தை மட்டுமே உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது, வன்னியர் சமுதாயம் குறித்த புள்ளி விவரங்கள் போதிய அளவில் இல்லை என்பதை மட்டுமே உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.

Related Stories: