×

விருதுநகர் இளம்பெண் வன்கொடுமை விவகாரம்: 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையிலான குழு 4-வது நாளாக விசாரணை

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 4 பள்ளி மாணவர்களிடம்  சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஹரிகரன், ஜூனைத் அகமது உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கூர்நோக்கு இல்லத்தில் வைத்து மாணவர்கள் 4 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணைக்காக மண்டபம் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த 2 மாணவர்கள் மதுரை அழைத்து வரப்பட்டனர்.  

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எட்டு பேரின் வீடுகளில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தினர். முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் டு முதற்கட்டமாக 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் வீடுகளிலும் சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். 8 பேரின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர், வீட்டில் இருந்த செல்போன், பென் ட்ரைவ், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் ஆய்வு செய்தனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இடங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறிய நிலையில் அவர்களை காவலில் எடுத்த விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதை தொடர்ந்து இன்று 4-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : CPCIT ,DSP , Virudhunagar violence, 4 school students,, investigation
× RELATED ரயில்கள் மீது கல்லெறிந்தால் கடும்...