விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏப். 30ம் தேதி வரை இலவச பார்க்கிங்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனங்களை வரும் 30ம் தேதி வரை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததின் பேரில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமீபத்தில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பனிமனை மெட்ரோ ரயில் நிலையங்களை கடந்த மார்ச் 13ம் தேதி முதல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்தது.

மேலும், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் மார்ச் 31ம் தேதி வரை பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்வதற்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் இலவசமாக வாகனம் நிறுத்தும் கால அளவை வரும் 30ம் தேதி (ஏப்ரல்) வரை நீட்டித்துள்ளது. எனவே பயணிகள் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் வரும் 30ம் தேதி வரை இலவசமாக வாகனம் நிறுத்தும் (இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம்) சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: