அசாம் உட்பட 3 மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் ரத்து: ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: நாகலாந்து, மணிப்பூர், அசாம் மாநிலங்களில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக, ‘ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்’ அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம், சந்தேகத்துக்குரிய யாரையும் பாதுகாப்பு படைகள் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம். இதன் காரணமாக, நாகலாந்து மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பரில் பஸ்சில் சென்ற அப்பாவி தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த 3 மாநிலங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து இந்த சட்டத்தை விலக்குவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிவித்தார். இது குறிப்பிடத்ததக்க பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. அதேநேரம், ‘இந்த 3 மாநிலங்களிலும் பதற்றமான பகுதிகளில் தொடர்ந்து இந்த சட்டம் அமலில் இருக்கும். இந்த சட்டத்தை முழுமையாக வாபஸ் பெற்றதாக கருதக் கூடாது,’ என்று அமித்ஷா வெளியிட்டுள்ள தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: