ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நியமனக்குழு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நியமனக்குழு உறுப்பினர் மற்றும் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நியமனக்குழு உறுப்பினர் மற்றும் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் நேற்று காலை நடைபெற்றது. இதில், நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுவை சேர்ந்த கல்பனா பார்த்திபனும், வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக திமுகவை சேர்ந்த வெங்கடேசன், திரிபுரசுந்தரி, சுமலதா நரேஷ் மற்றும் அதிமுகவை சேர்ந்த எம்ஆர்எஸ். ஆனந்தி சிவக்குமார் ஆகியோரும் மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்களை, எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என செயல் அலுவலர் மாலா தெரிவித்தார்.

Related Stories: