ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல்

சென்னை: சென்னையிலுள்ள ஆல்பர்ட் தியேட்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 2021-22ம் ஆண்டுக்கான சொத்துவரி செலுத்துவதற்கு நேற்றே கடைசி நாளென்றும் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்து இருந்தது. நிலுவையில் உள்ள சொத்து மற்றும் கேளிக்கை வரியை செலுத்தாத காரணத்தால் சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இதையடுத்து, நிலுவையில் இருந்த ரூ.51 லட்சத்துத்து 22 ஆயிரத்து 252 சொத்து வரியும் ரூ.14 லட்சம் கேளிக்கை வரியும் தியேட்டர் நிர்வாகம் செலுத்தியது. இதையடுத்து தியேட்டர் தொடர்ந்து செயல்பட மாநகராட்சி அனுமதி அளித்தது.

Related Stories: