விழுப்புரம் அருகே நடந்த கொடூரம் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் தாய் மாமன் உட்பட 3 பேர் கைது: 10 பேரை பிடித்து தீவிர விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த தாய் மாமன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 10 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்தார். அவர் பள்ளிக்குச்சென்றபோது சோர்வாக காணப்பட்டார். இதனைக்கண்ட தமிழ் ஆசிரியர் விசாரித்தபோது, சிலர் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்து வருவதாக அதிர்ச்சியான தகவலை கூறவே, மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு இப்பிரச்னையை கொண்டு சென்றனர். இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நீலம்பாள்  பாதிக்கப்பட்ட மாணவியிடம்  கேட்டறிந்தார். இது குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: செ.குன்னத்தூரைச் சேர்ந்த சிறுமியின் தாய்மாமன் சசிகுமார்(28). இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மாமன்முறை என்ற அடிப்படையில் சிறுமியிடம் நெருங்கி பழகியுள்ளார். மாணவி சற்று மனநலம்பாதிக்கப்பட்டதை தனக்கு சாதகமாக்கிய சசிகுமார், அவரை கடந்த சில மாதங்களாக பலாத்காரம் செய்துவந்துள்ளார். மேலும் தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த மாணவிக்கு  நாளுக்குநாள் பாலாத்கார கொடுமை அதிகரித்துள்ளது.

தினசரி அந்த சிறுமியை  கும்பல் பலாத்காரம் செய்துவந்ததாக தெரிகிறது. பள்ளிக்குச்செல்லும் முந்தையநாளில் 5 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்களாம். இதையடுத்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாய்மாமன் சசிகுமார் மற்றும் அடையாளம் தெரியாத சிலர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்றுமுன்தினம் சசிகுமாரை கைதுசெய்து சிறையில்அடைத்தனர். கூட்டு பாலாத்காரத்தில் ஈடுபட்டது  யார், யார் என்ற விவரங்களை சேகரித்த போலீசார் அவர்களை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே, பாலியல் வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதனால்,  இவ்வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கும்பலை  கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் 2 பேர் கைது: இந்நிலையில் சசிகுமாரைத் தொடர்ந்து செ.குன்னத்தூரைச் சேர்ந்த தர்மராஜ் (21) என்பவரையும், 17 வயது சிறுவனையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: