கொடைக்கானல் ஆராய்ச்சி மையம் தகவல் ஒரே நாளில் பூமியை 8 முறை தாக்கியது சூரிய காந்தப்புயல்

கொடைக்கானல்: சூசூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளியாகும் சக்தி வாய்ந்த காந்த புயல் பூமியின் வளி மண்டலத்தை தாக்கக்கூடும் என்று ஏற்கனவே நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து சூரிய காந்தப்புயலின் தாக்கம் குறித்து, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் 5 தொலைநோக்கிகள் மூலம் கண்காணித்து வந்தது. இதில் காந்தப்புயல் நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 முறை மிதமான முறையில் பூமியை தாக்கியது கண்டறியப்பட்டுள்ளது. இந்த காந்தப்புயலின் தாக்கம் இனிவரும் நாட்களில் வலுவாக தொடரும், இதனால் தொலைத்தொடர்பு சேவைகளில் பாதிப்புகள் ஏற்படும் என்று கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி குமரவேல் கூறுகையில், ‘‘இந்த காந்தப்புயலின் தாக்கத்தால் செல்போன் சேவை, செயற்கைக்கோள், ஜிபிஎஸ், தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும். தற்போது கூடுதலாக 4 தொலைநோக்கிகளை கொண்டு தொடர்ந்து வானியல் மாற்றங்களை கண்காணித்து வருகிறோம்.  11 ஆண்டுக்கு ஒரு முறை சூரிய காந்தப்புயல் பூமியை தாக்கும். 2003ல் இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  வரும் நாட்களில் சூரிய காந்தப்புயல் தீவிரமாக இருக்கும். இதை கண்காணிக்க தேவையான சிறப்பு ஏற்பாடுகள் கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையத்தில் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

Related Stories: