×

கணவருடன் சேர்த்து வைக்குமாறு இளம்பெண் தர்ணா போராட்டம்

சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் தேவி (29). இவரது கணவர் விபத்தில் இறந்துவிட்டார். 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் வெங்கடாசலம் என்பவருக்கும் தேவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. வெங்கடாசலத்தின் பெற்றோரின் சம்மதமின்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் எருமாப்பாளையத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் வெங்கடாசலம், மனைவியிடம் இருந்து பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தேவி, கணவரிடம் சென்று கேட்டார். அப்போது அவர் தனக்கு கடன் பிரச்னை இருப்பதாகவும், பெற்றோரிடம் சென்று ரூ.15 லட்சம் வாங்கிவருமாறும் கூறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் தேவி புகார் கூறினார். இந்த புகார் குறித்து டவுன் மகளிர் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் இளம்பெண் தேவி, சந்தைப்பேட்டையில் உள்ள கணவர் வெங்கடாசலத்தின் வீட்டின் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் நீதி வேண்டும் என்ற போர்டையும் கையில் பிடித்து அமர்ந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் தேவி, தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். கணவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர். அதனை நிறுத்த வேண்டும்’ என்றார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tharna , Young Tarna struggles to keep up with her husband
× RELATED தமிழ்நாடு வங்கி உருவாக்க கோரி புதுகையில் தர்ணா போராட்டம்