×

நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு அளித்துள்ளார். சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டுள்ளது. மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறினார். சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில்  சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு 2013ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும்,  படம் எடுக்க முடியாத நிலையில், மீண்டும் 2018ம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு:

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Tags : Ganavel Raja ,High Court of Chennai ,Sivagarthicayan , Actor Sivakarthikeyan, Opposing, High Court, Answer Petition, Gnanavell Raja
× RELATED கால்நடை மேய்ச்சலுக்கான புறம்போக்கு...