×

ஐபிஎல்2022: இன்றைய போட்டியில் சிஎஸ்கே-லக்னோ இன்று மோதல்

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30மணிக்கு நடைபெறும் 7வது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகினறன. சென்னை முதல் போட்டியில் கொல்கத்தாவிடமும், லக்னோ, குஜராத் அணியிடமும் தோல்வி அடைந்தன.

இதனால் இரு அணிகளும் இன்று வெற்றி கணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் களம் காண்கிறது. ஆல்ரவுண்டர் மொயின் அலியின் வருகை சென்னைக்கு வலு சேர்க்கும். சான்ட்னருக்கு பதிலாக அவர் ஆடும் லெவனில் இடம்பெறுவார். லக்னோ அணியில் மொசின் கானுக்கு பதிலாக ஆண்ட்ரூ டை இடம்பெறலாம். மற்றபடி இரு அணியிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

Tags : IPL 2022 ,CSK ,Lucknow , IPL 2022: CSK-Lucknow clash today
× RELATED சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும்...