×

பாக். அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!: பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து?.. தெஹ்ரீக் - இ- இன்சாப் கட்சி தலைவர்கள் புகார்..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தெஹ்ரீக் - இ- இன்சாப் கட்சி கூறியுள்ளது. இஸ்லாமாபாத்தில் பேசிய பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ- இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் பைசல் வாக்டா, பிரதமர் இம்ரான்கானை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் பொதுக்கூட்டங்களில் பேசும்போது குண்டு துளைக்காத பாதுகாப்பு அரணை ஏற்படுத்துமாறு இம்ரான்கானை கேட்டுகொள்ளதாக வாக்டா கூறினார். ஆனால் இறைவன் நிர்ணயித்த நேரத்தில் இந்த உலகை விட்டு வெளியேறுவேன் என்று இம்ரான்கான் கூறிவிட்டதாக பைசல் வாக்டா தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. தீர்மானத்தின் மீது வரும் 3ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டுள்ளதால் அவரது அரசுக்கு பெரும்பான்மை பலம் குறைந்துவிட்டது. இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பிரதமர் இம்ரான்கான் ராஜினாமா செய்ய மாட்டார் என மூத்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Bach ,Imran Khan ,Insaf , Bach. Prime Minister Imran Khan, life, danger?
× RELATED கலவர வழக்கில் இம்ரான்கான் விடுதலை