×

பெட்ரோல் விலை உயரும் நிலையில், சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பது நியாயமா? : டிடிவி தினகரன்!!

சென்னை: பெட்ரோல் விலை உயரும் நிலையில், சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பது நியாயமா? என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சவாடிகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்து வரும்நிலையில், மாநிலத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டணம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைமுறைக்கு வரவுள்ளது.  

இந்த நிலையில் இதுகுறித்து தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ உரிமம் காலாவதியான சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சுங்கச் சாவடி கட்டணங்களை உயர்த்தியிருப்பது மோசமான நடவடிக்கையாகும். பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்? மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி சுங்கக் கட்டண உயர்வை கைவிடுவதுடன், காலாவதியான சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags : DTV , Petrol, Customs, DTV Dhinakaran
× RELATED தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!!