×

உக்ரைனின் மரியுபோல் நகரில் மீண்டும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா.. மக்கள் உடனடியாக வெளியேறும்படி வேண்டுகோள்!!

கீவ் : உக்ரைனின் மரியுபோல் நகரில் மீண்டும் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 36வது நாளாக தொடர்கிறது. உக்ரைன் முக்கிய நகரங்களை சர்வ நாசமாக்கி வருகிறது ரஷ்ய ராணுவம். தலைநகர் கீவ், கார்கிவ், செர்னிவ், லிலிவ், மரியுபோல், கெர்சன் உள்ளிட்ட கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைனில் உள்ல முக்கிய நகரங்களில் ரஷ்ய ராணுவம் தரைவழி, வான்வழி தாக்குதல் மூலம் உயரமான கட்டிடங்களை எல்லாம் தரைமட்டாகி உள்ளது. இதில் உக்ரைன் தரப்பில் பல ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தலைநகர் கீவ்வை அடுத்த இர்பின் என்ற புறநகரில் மட்டும் 200 பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ரஷ்ய தரப்பில் 7 மூத்த ராணுவ தளபதிகள் உட்பட 14000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்துவிட்டனர் என்றும் உக்ரைன் கூறி வருகிறது. இந்த நிலையில் தான் மரியுபோல் நகரில் மீண்டும் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் உடனடியாக எல்லைப்பகுதிகளுக்கு வெளியேறும் படி ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது. செர்னோபில் அணுஉலை வளாகத்தில் இருந்து தங்கள் துருப்புகளை ரஷ்யா வெளியேற்றி விட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது.

இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோபிடன் தொலைபேசியில் பேசினார். உக்ரைனுக்கு ஏற்கனவே 2 முறை 1000 மில்லியன் டாலர் அளவிற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறத்தில் உக்ரைன் மீதான தாக்குதலை முற்றாக நிறுத்த ரஷ்யாவை இன்னும் பொருளாதார தடைகளால் இன்னும் கடுமையாக நிறுத்த வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். 


Tags : Russia ,Mariupol, Ukraine , Ukraine, Mariupol, Ceasefire, Russia, Request
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...