திருப்பத்தூர் ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பெண் தொழிலாளகளை ஏற்றிக் கொண்டு சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியது. தடுப்பு சுவரின் மறுப்பக்கத்திற்கு சென்ற வேண் எதிரே வந்த லாரி மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் பெண் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த நிலையில் சிலர் காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான வேனில் சுமார் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.

Related Stories: