×

முதலியார்குப்பம் படகு குழாமில் கூடை மிதி படகு அறிமுகம்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த ஈசிஆர் சாலை முதலியார்குப்பம் பக்கிங்காம் கால்வாயில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் படகு குழாம் உள்ளது.  இங்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுபோல் வரும் சுற்றுலா பயணிகள் கையாக், ஸ்பீடு படகு, பெடல் படகு, துடுப்பு படகு, வாழைப்பழ படகு உள்பட பல்வேறு வகை படகுகளில் பக்கிங்காம் கால்வாய் வழியாக சுமார் 5 கிமீ தூரம் சவாரி செய்து ஹைலேண்ட் வரை சென்று வந்து மகிழ்கின்றனர்.

இதையொட்டி இங்கு, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், இந்த படகு குழாமில் விளம்பர பதகைகள், செல்பி பாயின்ட் மற்றும் ஹைலேண்ட் பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து இயற்கையை ரசிப்பதற்காக இருக்கைகள், கூடாரங்கள் உள்பட பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலியார்குப்பம் படகு குழாமில் தற்போது சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய புதிய வகையான கூடை மிதி படகினை படகு நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. ஒரேநேரத்தில் 2 பேர் பயணிக்க கூடிய இந்த மிதி படகில், அரைமணி நேரம் சவாரி செய்ய ₹300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் இந்த மிதி படகில் உற்சாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Mudaliarkuppam , Mudaliarkuppam, in the boat crew, basket pedal boat
× RELATED முதலியார்குப்பம் படகு குழாமில் ரூ 50...