×

வண்டலூர் கிரசன்ட் கல்லூரியில் இன்டெல் உன்னதி தகவல் மைய ஆய்வகம்: அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த வண்டலூர் கிரசன்ட் கல்லூரியில் பி.எஸ்.அப்துல் ரகுமான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய திட்டமான இன்டெல் உன்னதி தகவல் மைய ஆய்வகத்தை, தகவல் தொடர்பு துறை அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு அதன், தன்மையை கேட்டறிந்தார். அப்போது, சிஐஐசியின் தலைமை நிர்வாகி பார்வேசலம் பேசுகையில், ‘சட்டங்களின் எண்ணிக்கையை கூட்டுவதும், தமிழ்நாட்டின் ஜிடிபிஐ உயர்த்துவதில் சிஐஐசியின் பங்கு இருக்கும் என்றார். ஆய்வகத்தில் மிக சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில், நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்கள் ஆரிப், புகாரி ரகுமான், அப்துல்காதர், அப்துர் புகாரி ரகுமான், முனைவர் பீர்முகமது, முனைவர் அசாத், முனைவர் ராஜா உசைன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் மனோதங்கராஜ், செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தகவல் தொடர்பு வளர்ச்சியடைய தமிழக அரசும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதேபோல் கிரசன்ட் கல்வி நிறுவனம், இன்டெல் நிறுவனம் இணைந்து இன்டெல் உன்னதி திட்டத்தை துவங்கியுள்ளன.

இத்திட்டம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் துவக்க நிலை நிறுவனங்களாக மாற்றி அவர்களுக்கு நிதியுதவி, தொழில்நுட்ப உதவி, முறையான வழிகாட்டுதல்களை வழங்கி வேலை வாய்ப்பு மற்றும் உற்பத்தியை பெருக்கும் முயற்சி. இதில், கிரசன்ட் கல்லூரியுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து 150க்கும் மேற்பட்ட ஸ்டாட் அப் நிறுவனங்களோடு செயல்பட கூடிய நிலைக்கு வந்துள்ளது பாராட்டுக்கு உரியது. தமிழக ஐடி துறை அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்குகிறது என்றார்.

Tags : Intel ,Information Center ,Vandalur ,Crescent ,College ,Minister ,Mano Thankaraj , Vandalur, Crescent College, Intel Unnati, Lab, Mano Thankaraj
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்