கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ வழங்கினார்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம் நகர கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு, நல்லம்பக்கம், கண்டிகை, வேங்கடமங்கலம், ரத்தினமங்கலம், நெடுங்குன்றம், கொளப்பாக்கம், அண்ணாநகர், கீரப்பாக்கம், முருகமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது தங்க நகைகளை அடகு வைத்தனர். இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி நல்லம்பாக்கம் நகர கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி சான்று வழங்கும் விழா நேற்று நடந்தது. வங்கி செயலாளர் எம்.அம்பிகா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் நெடுங்குன்றம் வனிதா சீனிவாசன், நல்லம்பாக்கம் லட்சுமணன், துணை தலைவர் ஹேமமாலினி வாசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜே.வி.எஸ்.ரங்கநாதன், கே.ஸ்.ரவி, சோ.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக இளைஞரணி அமைப்பாளர் ஏவிஎம் இளங்கோவன் வரவேற்றார்.

 

சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன் ஆகியோர் கலந்துகொண்டு 260 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கினர். இதில், திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெ.ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் நேதாஜி, நிர்வாகிகள் ராஜன் ஆறுமுகம், நேரு, பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஆ.கருணாகரன் நன்றி கூறினார். செய்யூர்:

செய்யூர் தொகுதியில் செய்யூர் மற்றும் சூனாம்பேடு கூட்டுறவு சங்கம் மூலம் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு சான்றுடன் நகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்எல்ஏ பனையூர் பாபு கலந்துகொண்டு 200க்கும் மேற்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்று மற்றும் நகைகளை வழங்கினார். லத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு,  ஒன்றியக்குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பாபு, சிற்றரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், செய்யூர் தொகுதி செயலாளர் பொன்னிவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து லத்தூர் ஒன்றியம் அகரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ பனையூர் பாபு 15 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

Related Stories: