ஒடிசாவில் மேலும் 2 ஏவுகணை சோதனை

பாலசோர்: ஒடிசாவின் பாலசோரில் உள்ள கடற்கரையில் தரையில் இருந்து பாய்ந்து சென்று எதிரிகளின் விமானங்களை குறிவைத்து தாக்கி அழிக்கும் நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை நேற்று நடத்தப்பட்டது. சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளம் 3ல் இருந்து நடுத்தர ஏவுகணைகள் ஏவி சோதனை செய்யப்பட்டது. இவை குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தன. இரண்டு சோதனையும் வெற்றி பெற்றதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஞாயிறு அன்றும் இரண்டு ராணுவ நடுத்தர தொலைவு ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

Related Stories: