×

கும்பகோணம் அருகே பட்டறையில் 5 அடி உயர நடராஜர் சிலை மீட்பு: பதுக்கி வைக்கப்பட்டதா?

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பட்டறையில் 5 அடி உயர நடராஜர் சிலை நேற்று மீட்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதி டி.மாங்குடியை சேர்ந்த சதீஷ்குமாருக்கு சொந்தமான சிலை தயாரிக்கும் பட்டறையில் தொன்மையான சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை திருட்டு தடுப்புக் காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருச்சி கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையிலான தனிப்படையினர் சதீஷ்குமாரின் பட்டறையில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 5 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட தொன்மையான உலோக நடராஜர் சிலை அங்கு இருந்தது தெரியவந்தது. சிலைக்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் அதை போலீசார் மீட்டனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், இந்த சிலை தமிழகத்தில் உள்ள எந்த கோயிலுக்கு சொந்தமானது என ெதாடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Tags : Natarajar ,Kumbakonam , Kumbakonam, 5 feet high Natarajar statue
× RELATED சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு