பொதி மூட்டைகள் போல ஒரே ஆட்டோவில் 30 பள்ளி குழந்தைகள் அடைக்கப்பட்ட கொடூரம் : தட்டிக் கேட்ட நபருடன் பள்ளி ஆசிரியை வாக்குவாதம்!

தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பொதி மூட்டைகள் போல ஒரே ஆட்டோவில் அதிக மாணவர்களை அடைத்து வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது. பாவூர்சத்திரம் அருகே உள்ள தனியார் பள்ளி மருதடியூர் மற்றும் சாலடியூரில் இருந்து ஆட்டோக்கள் மூலம் மாணவர்களை அழைத்து வருகிறது. ஒரே ஆட்டோவில் சுமார் 30 குழந்தைகளை அடைத்து வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் மூச்சுத்திணறல் மற்றும் கீழே விழும் ஆபத்து இருப்பதாகவும் அச்சப்படுகின்றன. வழக்கம் போல மாணவர்களை அழைத்துச் செல்ல ஆசிரியர் வந்த போது, இதனை தட்டிக் கேட்டு வீடியோ எடுத்துள்ளனர். அவர்களுடன் ஆசிரியை வாக்கு வாதம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வீடியோ பரவியதால் குழந்தைகள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: