ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்..!!

டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல் 3 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.9,544.5 கோடி செலவினம் ஏற்படும். 47.68 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்கள், 68.63 லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பயனடைவார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

Related Stories: