×

செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கும் வழக்கு அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை

புதுடெல்லி: செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் எச்.எல்.எல் தடுப்பூசி நிறுவனத்தை மாநில அரசுக்கு குத்தகைக்கு வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அரசு தடுப்பூசியை வழங்கியது போதவில்லை என்பதால், தமிழக அரசு அதை வாங்குவதற்கு உலகளாவிய டெண்டர் கோரியது. இந்நிலையில், வழக்கறிஞர் சபரீசன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2ம் தேதி ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், ‘நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் பாதிப்பு மிக மோசமாக இருப்பதால், மாநிலங்களுக்கு தடுப்பூசி தேவையும் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் தடுப்பூசியை தயாரிப்பதற்கு செங்கல்பட்டில் இருக்கும் எச்.எல்.எல் தடுப்பூசி நிறுவனத்தை மாநில அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும். இது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதே போன்று, இந்தியவின் மொத்த மக்கள் தொகை 130 கோடி என்றாலும் கூட, நாடு முழுவதும் தடுப்பூசியின் தேவை 310 கோடியாக இருக்கிறது. அதனால், நாடு முழுவதும் செயல்படாமல் இருக்கும் அத்தனை தடுப்பூசி நிறுவனங்களையும் உடனடியாக திறந்து அதன் உற்பத்தியை தொடங்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை அவசர மனுவாக கருதி உடனடியாக விசாரிக்கும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் நேற்று வைத்தார். …

The post செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கும் வழக்கு அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,New Delhi ,HLL ,Chengalpattu district ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை