ஐபில் லீக் ஆட்டத்தில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்

மும்பை: மும்பையில் இன்று நடைபெற உள்ள ஐபில் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்த போதிலும் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது.

பெங்களூரு அணியின் கேப்டன் டுபிளசிஸ் அதிரடியாக விளையாடி 88 ரன்களையும், விராட் கோலி 41 ரன்களை விளாசிய நிலையில் மோசமான பந்துவீச்சின் காரணமாக அந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தது. இதனால் இன்று கொல்கத்தா அணியுடன் நடக்க உள்ள போட்டியில் வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் நடப்பு சீசனில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்ற உற்சாகத்தில் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது. கொல்கத்தா அணியில் ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் என பேட்டிங் பட்டாளம் நிறைந்துள்ளது. பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், சிவம் மாவி உள்ளிட்டோர் விக்கெட்டுகளை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடும் சவால் காத்துக்கொண்டிருக்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் களமிறங்க உள்ளது.

Related Stories: