பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் குட்டி யானையின் உடல் கண்டெடுப்பு

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை மயில் மொக்கை  வனப்பகுதி மற்றும் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று  சிறுமுகை வனவர்  மற்றும் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்த  நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கோவை உயர் அதிகாரிகளுக்கு  தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வன மருத்துவர்களை வரவழைத்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்து கிடந்தது 6 வயது  மதிக்கத்தக்க பெண் குட்டி யானை எனவும், கல்லீரல் நோய் பாதிக்கப்பட்டு  உயிரிழந்ததும் முதல் கட்ட ஆய்வில் என தெரியவந்துள்ளது. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பு  தொடர்ந்து வருகிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வன  உயிரின ஆர்வலர்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: