×

கடன் வசூலிக்கும்போது சுய உதவிக்குழுக்களுக்கு இன்னல் ஏற்படுத்தக் கூடாது: வங்கிகளுக்கு அமைச்சர் அறிவுரை

சென்னை: கொரோனா காலத்தில் மாநிலம் முழுவதும் சுய உதவிக்குழுக்களிடம் கடன் வசூலிக்கும் போது இன்னல்களை ஏற்படுத்தக்கூடாது என வங்கிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவுரை வழங்கினார். தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பெண்களுக்கு குறு  நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதிலும், கடனை திரும்ப வசூலிப்பதிலும்  எழுந்துள்ள சிக்கல்கள் குறித்த விபரங்கள் அரசின் கவனத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 19ம் தேதி பிரதமர் மோடி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு கடிதம் வாயிலாக சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதிலும், சுய உதவிக்  குழுக்கள் கடனை திரும்பச் செலுத்துவதிலும் சலுகைகள் வழங்குமாறு கேட்டுக்  கொண்டார். தமிழக ஊரக  வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில் நுண்நிதி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மகளிர் திட்ட அலுவலர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அப்போது, மகளிர் திட்ட அலுவலர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்களுடன் காணொலி வாயிலாக அமைச்சர் கலந்துரையாடினார்.  கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:   மாவட்டந்தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் உள்ள குறைபாடுகளை களைய மாநில அளவில் ஓர் உதவி அழைப்பு மையம்  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மிக விரைவில் உருவாக்கப்படும். குறு நிதி நிறுவனங்கள் தங்களுடைய கடனை வசூலிக்கும் போது மென்மையான போக்கினை கையாள வேண்டும். இப்பேரிடர் காலத்தில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு எந்தவிதமான இன்னல்களும், குறு நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் ஏற்படக்கூடாது. இதனை திட்ட இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் கண்காணித்து அவ்வப்போது அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இப்போக்கிற்கு மாறாக செயல்படும் நிறுவனங்களின் செயல்பாடுகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். …

The post கடன் வசூலிக்கும்போது சுய உதவிக்குழுக்களுக்கு இன்னல் ஏற்படுத்தக் கூடாது: வங்கிகளுக்கு அமைச்சர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : SHGs ,Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...