×

புதுச்சேரியில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 4 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டமன்றத்தில் அமளிக்கிடையே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் இரண்டாவது சட்டப்பேரவையின் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் வரும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை புதுச்சேரி மாநிலத்தில் ரூ.3,613 கோடிக்கு அரசின் இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார்.

இதில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 4 மாதங்களுக்கு மட்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பொறுத்தவரை கடந்த 2011-ம் ஆண்டு முதல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியின் வரிவருவாய் சுற்றுலாத்துறையின் மூலம் மற்றும் பிற துறையின் மூலம் கிடைக்கின்றன.

ஏப்ரலில் ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கும் முடிவுக்கு பின்னர் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் 2022-ம் ஆண்டிற்கான நிதிஒதுக்க சட்ட முன்வரைவு முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்தார்.

Tags : Puducheri , Interim budget tabled for 4 months from April to August in Pondicherry
× RELATED குண்டும், குழியுமான கைக்கிளப்பட்டு சாலை-சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்