ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை: ஒடிசா முதல்வர் பட்நாயக் கருத்து

புதுடெல்லி: பிஜூ ஜனதா தளத்தின் தலைவரும், ஒடிசா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று டெல்லி வந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் தனது கட்சியின் மக்களவை, மாநிலங்களவை எம்பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘எனது கட்சி எம்பி.க்களை சந்திப்பதற்காகவும் ஒடிசாவின் வளர்ச்சி திட்டங்களை குறித்து எடுத்துக் கூறவும் நாடாளுமன்றத்துக்கு வந்தேன். ஜனாதிபதி தேர்தல் குறித்து நான் இன்னும் யோசிக்கவில்லை. அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்ைல. அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக ஒன்றிய அரசோ அல்லது எதிர்க்கட்சிகளோ ஆதரவு கோரி பிஜூ ஜனதா தளத்தை அணுகவில்லை,” என்றார்.

Related Stories: