×

உபி சபாநாயகராக சதீஷ் மகானா தேர்வு: 8 முறை எம்எல்ஏவாக இருந்தவர்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 255 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. யோகி ஆதித்யநாத் 2வது முறையாக முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். அவருடன் 2 துணை முதல்வர்கள், 50 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 29 (நேற்று) நடைபெறும் என்று ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் அறிவித்திருந்தார். அதன்படி, இப்பதவிக்கு மகராஜ்பூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்ற பாஜ மூத்த உறுப்பினரான சதீஷ் மகானா வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் பகுஜன் சமாஜ் - பாஜ கூட்டணி ஆட்சியிலும், கல்யாண் சிங், ராம்பிராகஷ் குப்தா, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பாஜ ஆட்சிகளிலும்  அமைச்சராக பணியாற்றி உள்ளார்.


Tags : Satish Magana ,MLA , Satish Magana elected UP Speaker: 8-time MLA
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்