தமிழக அமைச்சரவையில் முதன்முறையாக ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம்: போக்குவரத்து துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் நியமனம்

சென்னை: போக்குவரத்து அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் இலாகா மாற்றப்பட்டு, புதிய போக்குவரத்து துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதே இதுவே முதல் முறையாகும்.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக முதல்வர் பரிந்துரையின் அடிப்படையில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்ட போக்குவரத்து இலாகா, பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன் துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கருக்கு மாற்றப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் இனி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இலாகாவை கவனிப்பார் என்று கூறி உள்ளார்.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற கடந்த 10 மாதங்களில் அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Related Stories: