அன்னவாசல் அருகே ஒரே இடத்தில் பிடிபட்ட 3 மலைப்பாம்புகள்

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் கிராமத்தின் சீரணி அரங்கத்தின் பின்புறம் உள்ள புது குளக்கரையில் நேற்று நடந்து சென்றவர்களுக்கு வித்தியாசமான சத்தம் கேட்டது. இதையடுத்து சத்தம் கேட்ட திசையில் சிலர் சென்று பார்த்தபோது மூன்று மலைப்பாம்புகள் ஒன்றோடு ஒன்றாக பின்னிக் கிடந்ததைக் கண்டனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மலை பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர்.

இப்பகுதியில் அடிக்கடி மலைப்பாம்புகள் பிடிக்கப்படுவதும், அதை தீயணைப்புதுறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பதும் தொடர் கதையாகி வருகிறது. வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் மலைப்பாம்புகளை வனத்துறையினர் காப்பு காட்டில் தான் விடுகிறார்களா? அல்லது வழியில் காட்டுப்பகுதியில் விடுகிறார்களா? என பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: