×

“கைது செய்... கைது செய்.. என வடிவேலு மாதிரி காமெடி செய்கிறார் அண்ணாமலை: ஆர்.எஸ்.பாரதி பதிலடி

டெல்லி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவமில்லை என ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவமில்லை. பா.ஜ.க மாநிலத் தலைவரான அண்ணாமலை பொறுப்புடன் பேச வேண்டும். திமுகவை குற்றம் சாட்டினால் பாஜகவில் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் பேசுகிறார் அண்ணாமலை எல்லா வழக்கிலும் கைது செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. புகார் அளித்தால் விசாரணைக்குப் பின்னர் தான் போலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள்.

அண்ணாமலை எப்படி போலிஸ் ஆனாரோ தெரியவில்லை. அண்ணாமலை சிறைக்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்து விட்டார். அநாவசியமாக யாரையும் நாங்கள் கைது செய்வதில்லை. அதற்குரிய சூழல் ஏற்படும்போது நிச்சயம் ஜெயிலுக்குப் போவார். எனக்கும், பி.வில்சனுக்கும் அறிவு இருக்கிறதா என்று கேட்கிறார் அண்ணாமலை. எங்களுக்கு அண்ணாமலை சான்றிதழ் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. யாருக்கு அறிவு இல்லை என்பது மக்களுக்குத் தெரியும். கைது செய்... கைது செய்.. என வடிவேலு மாதிரி காமெடி செய்கிறார் அண்ணாமலை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க கோடிக்கணக்கில் பணம் அனுப்பப்பட்டது. அப்போது அண்ணாமலைதான் காவல் அதிகாரி, எங்களிடம் இதுதொடர்பான ஆதாரங்கள் உள்ளது, பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.



Tags : Mothavelu ,Anamalai ,R. S. Bharati , Vadivelu is making a comedy like 'Arrest ... Arrest ...' Annamalai: RS Bharathi retaliates
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...