திருப்புத்தூர் அருகே மாரியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். கீழச்சிவல்பட்டி ஸ்ரீமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 20ம் தேதி காலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து மாரியம்மன் கோயிலுக்கு மாரியம்மன் எழுந்தருளல் நடந்தது. மாலையில் காப்பு கட்டப்பட்டு விழா துவங்கியது. 2ம்நாள் முதல் 8ம் நாள் வரை அம்மன் வெள்ளி சிம்மம், ரிஷபம் வாகனத்தில் எழுந்தருளினார்.

நேற்று காலை மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.  இன்று காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பால்குடம் ஊர்வலம் சிவன் கோயில் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம், முத்தப்பர் கோட்டம், சந்தப்பேட்டை, மந்தையம்மன் கோயில் பகுதி வழியாக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பாலால் மாரியம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

Related Stories: