எடப்பாடி ஊரில் சசிகலா

சேலம்: சேலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது நீக்கியதுதான், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என கூறினார். இந்நிலையில், சசிகலா சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இவர் வருகிற 7ம் தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.

அங்கிருந்து நேராக எடப்பாடி செல்கிறார். அங்கு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்து விட்டு, சேலம் வந்து தங்குகிறார். மறுநாள் 8ம் தேதி சேலம் ராஜகணபதி கோயில் அல்லது கோட்டை மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சசிகலா ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன்பிறகு மேச்சேரி, தாரமங்கலம், மேச்சேரி, மேட்டூர் ஆகிய இடங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அந்தியூர் செல்கிறார்.

Related Stories: