×

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: கைதான 4 பேரை 6 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அனுமதி.!

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை 6 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி 7 நாள் விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 6 நாட்களுக்கு அனுமதி அளித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகரில் தனியார் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்துள்ளார். பின்னர், ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை அவரகள் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், ஹரிஹரன் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, விருதுநகர் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் உள்ள ஹரிஹரன், அகமது, மாடசாமி பிரவீன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இவர்கள் 4 பேரையும் 6 நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விருதுநகரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் கைதானவர்களில் 4 பேரின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. செல்போன்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்து சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

Tags : Virudhunagar ,Srivilliputhur court , Virudhunagar teen sexually abused: Srivilliputhur court allows 4 arrested persons to be remanded in custody for 6 days.
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...