அடக்குமுறை பாஜக ஆட்சியை எதிர்த்து போராட அனைத்து முற்போக்கு சக்திகளும் கைகோர்க்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர்கள், முதலமைச்சர்களுக்கு மம்தா அழைப்பு..!!

கொல்கத்தா: நாட்டின் ஜனநாயகத்தின் மீது பாஜக நேரடி தாக்குதல் நடத்தி வருவது கவலை தருவதாக தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை ஒழிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அடக்குமுறை பாஜக ஆட்சியை எதிர்த்து போராட அனைத்து முற்போக்கு சக்திகளும் கைகோர்க்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனநாயகத்தின் மீது பாஜகவின் நேரடி தாக்குதல்கள் கவலை தருவதாக தெரிவித்துள்ளார். இதனை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள மம்தா, தலைவர்களின் வசதிக்கேற்ற இடத்தையும், நேரத்தையும் முடிவு செய்து விரைவில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் தகுதியான அரசாங்கத்திற்கு வழிவகுக்க ஒன்றிணைந்து எதிர்க்கட்சியை உருவாக்க உறுதியேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: