மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமார் நியமனம்

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமாரை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஆர்.என் ரவி செயல்பட்டுவருகிறார். துணை வேந்தரை நியமிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கும் சூழலில் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் பேராசிரியராக தற்போது பணியாற்றி வரும் குமாரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமித்துள்ளார்.

Related Stories: