ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு ஆட்டோ மீது லாரி மோதி பெண் பரிதாப பலி: 5 பெண்கள் படுகாயம்

ஊத்துக்கோட்டை: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக பலியானார். மேலும் 5 பெண்கள் படுகாயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் துளசி அனுமான்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ஞானேஸ்வர்(24). லாரி டிரைவர். இவர் ேநற்று திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டையை நோக்கி லாரியை ஓட்டி வந்தார். சீத்தஞ்சேரி கூட்டுசாலையில் வந்தபோது எதிரே திருவள்ளூர் நோக்கி வந்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த கலையரசன் என்பவர் ஓட்டி வந்த ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியது.  

இதில் ஆட்டோ பக்கவாட்டில் கவிழ்ந்தது. மேலும், ஆட்டோவில் வந்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த ஜோதி(40) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மேலும் ஆட்டோவில் பயணம் செய்த அதே கிராமத்தை சேர்ந்த சாரதாம்பாள்(65), பொம்மி(60), வைஜெயந்தி மாலா(50), உஷா ராணி(55), சரஸ்வதி(65) ஆகியோர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்த பென்னலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். ஆட்டோ டிரைவர் தப்பி ஓடிவிட்டார். லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Related Stories: