செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய எஸ்பி பொறுப்பேற்பு

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக கடந்த 2019 நவம்பரில் பிரிக்கப்பட்டது. மாவட்டத்தின் முதல் எஸ்பியாக கண்ணன், பொறுப்பேற்றார். பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, 2வது எஸ்பியாக சுந்தரவதனம் 100 நாட்கள் மட்டுமே பணியாற்றி சென்னை மாதவரம் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

தொடர்ந்து, எஸ்பியாக வந்த விஜயகுமார் கடந்த 2 மாதத்துக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின்னர், அரவிந்தன் எஸ்பியாக பதவியேற்றார். தற்போது, அவரை பணியிட மாற்றம் செய்து, புதிய எஸ்பியாக சுகுணா சிங் நியமிக்கப்பட்டார். மயிலாடுதுறை எஸ்பியாக இருந்த சுகுணா சிங், நேற்று  செங்கல்பட்டு எஸ்பியாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு, அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டு 2 ஆண்டுகள், 4 மாதத்தில் 5 எஸ்பிக்கள் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: