×

திறமையானவர்களை தேர்வு செய்ய, பயிற்சி அளிக்க தமிழகத்தில் சீர்திருத்த குழு அமைப்பு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில்,  சட்டப் பேரவையில் அறிவித்தபடி, திறமையானவர்களை தேர்வு செய்ய, பயிற்சி அளிக்க என்று தமிழகத்தில் சீர்திருத்த குழு அமைப்பு, தமிழ்நாட்டில் சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசின், ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கிவரும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில்  2022ம் ஆண்டுக்கான முதல்நிலை பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் விழாவில் பங்கேற்று பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தனர். அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ளதால் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இந்த பயிற்சி  முகாம் சிறப்பாக நடக்கிறது. தமிழக அமைச்சரவையில் நான் கேட்ட துறையைக் காட்டிலும் கேட்காமலேயே  சிறந்த துறையான மனித வள மேலாண்மைத் துறையை  முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.  

நிதித்துறையைக் காட்டிலும் மிக முக்கியமான துறையாக நான் பார்ப்பது மனித வளத்துறையைத்தான். தமிழ்நாட்டில் துறைவாரியாக வளர்ச்சிகளை பெறுவதற்கு  தொழில்நுட்ப ரீதியாக  பல்வேறு முன்னெடுப்புகளை இருந்தாலும் மனித வள மேம்பாட்டுத்துறை என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு  முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சி ஏற்பட்டாலும் இன்றும் ் 300 ஐஏஎஸ் அதிகாரிகளே உள்ளனர். திறமையானவர்களை தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது மேம்படுத்துவது, குறித்த மனித வள மேம்பாட்டுத்துறை  சார்பில் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, சீர் திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழு 6 மாதத்தில் தங்கள் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள். திராவிட கட்சிகளின் கொள்கைப்படி மனித வள மேம்பாட்டுத்துறையின் மூலம் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின் கல்வியின் விளிம்பு நிலைக்கு  கீழ் உள்ள மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை அரசுத் துறையில் உயர் பதவி இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளை இந்த பயிற்சி முகாம் செய்து வருகிறது. 2021ம் ஆண்டு நடத்திய நேர்முகத் தேர்வு மூலம் 19 பேர் தேர்ச்சி பெற்று ஆட்சிப் பணிக்கு சென்றுள்ளனர். குடிமைப் பணிகளில் ஒரு காலத்தில் தமிழ்நாடு சிறப்பாக இருந்தது. பல்வேறு காரணங்களால் சரிந்துவிட்டது.





Tags : Reform Committee ,Tamil Nadu ,Minister ,Palanivel Thiagarajan , To select and train talented people Reform Committee in Tamil Nadu: Minister Palanivel Thiagarajan Information
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...