புதுச்சேரியில் அரசு பள்ளி நிலம் போலி பத்திரம் மூலம் 70 லட்சத்திற்கு விற்பனை: மாஜி அமைச்சர் மகன் மீது வழக்குபதிவு

புதுச்சேரி: புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டையில் அன்சாரி  துரைசாமி அரசுப்பள்ளிக்கு சொந்தமான இடம் உள்ளது. கடந்த 2008ல்  வி.கே.பாண்டியன் என்பவர் இந்த இடத்தின் பத்திரத்தை போலியாக தயாரித்து  சிலருக்கு ரூ.70 லட்சத்திற்கு விற்றுள்ளார். இதனால் அவர்கள் அந்த இடங்களை  தற்போது அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்த விவரம் கல்வித்துறைக்கு  தெரியவே, துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து  லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கல்வித்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் பாண்டியன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவ்விவகாரம் தற்போது காவல் துறை வரை சென்றதால் பாண்டியன் தலைமறைவாகி  உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  முறைகேட்டில் ஈடுபட்ட வி.கே.பாண்டியன், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கதிர்வேல் மகன்  என்பது குறிப்பிடத்தக்கது.கல்வித்துறைக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரம் மூலம் விற்பனை செய்த சம்பவம் லாஸ்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: