திருவலத்தில் மாணவி தற்கொலை முயற்சி போக்சோவில் கைதான பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

வேலூர்:  திருவலத்தில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், போக்சோ சட்டத்தில் கைதான அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய முரளிகிருஷ்ணன்(56), 13 வயது மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி கடந்த 26ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து திருவலம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் முரளிகிருஷ்ணன், பாலியல் தொல்லை கொடுத்ததால், மாணவி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் ஆசிரியர் முரளிகிருஷ்ணனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் ஆசிரியர் முரளிகிருஷ்ணனை நேற்று சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவிட்டார்.

Related Stories: