×

மயாமி ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஸ்வியாடெக்

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார்.3வது சுற்றில் உள்ளூர் வீராங்கனை மேடிசன் பிரிங்கிளுடன் (31வயது, 59வது ரேங்க்)  மோதிய ஸ்வியாடெக் (20 வயது, 2வது ரேங்க்) 6-0, 6-3 என நேர் செட்களில் எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தைய  சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 5 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் கோரி காப் (18வயது, 17வது ரேங்க்),  சீன வீராங்கனை ஷூவாய் சாங் (33 வயது, 43வது ரேங்க்) மோதினர். அதில் காப் 1 மணி,  47 நிமிடங்கள் கடுமையாகப் போராடி  7-6 (7-1), 7-5 என நேர் செட்களில் வென்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில்   ஸ்வியாடெக் - காப் மோதுகின்றனர்.

முன்னணி வீராங்கனைகள் பவுளா படோசா (ஸ்பெயின்), பெத்ரா குவித்தோவா (செக் குடியரசு), வெரோனிகா குதெர்மதோவா (ரஷ்யா), அனெலினா கலினினா (உக்ரைன்), ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டோனால்டை வீழ்த்தினார். கேஸ்பர் ருட் (நார்வே), நிக் கிர்ஜியோஸ், தனாசி கோக்கினாகிஸ் (ஆஸி.), யானிக் சின்னர் (இத்தாலி), பிரான்சஸ் டியாபோ (அமெரிக்கா) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்துள்ளனர்.

Tags : Swiatech ,Miami Open Tennis , Miami Open Tennis SwiTech in the 4th round
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகாவை வீழ்த்தினார் கரோலின்