×

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா தொற்று: இந்திய பயணம் ரத்தாகுமா?

புதுடெல்லி: இஸ்ரேல் பிரதமர் நப்தாலி அடுத்த வாரம் இந்தியா வர உள்ள நிலையில் அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரது இந்திய வருகை ரத்து செய்யப்படலாம் என கருதப்படுகின்றது.இஸ்ரேலின் பிரதமர் நப்தாலி பென்னட்(50). இவர் வருகின்ற 3ம் தேதி 5ம் தேதி வரை இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் பிரதமர் நப்தாலி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரதமர் நலமுடன் இருக்கிறார். அவர் வீட்டில் இருந்து பணியாற்றுவார்’’  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ரத்து செய்யப்படலாம் அல்லது ஒத்திவைக்கப்படலாம் என்று கருதப்படுகின்றது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இன்னும் வௌியாகவில்லை.




Tags : Israel ,India , Corona infection for Israeli PM: Will Indian trip be canceled?
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...