×

திருத்தணி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று ஞாயிற்றுக்கிழைமை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்துவிட்டதால் கோயிலுக்கு நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு வழக்கத்தைவிட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். படிக்கட்டு வழியாக பக்தர்கள் நடந்து சென்று தரிசனம் செய்தனர்.

கார், வேன், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். மலைக்கோயில் வளாகத்தில் நீண்டவரிசையில் நின்று பக்தர்கள் முருகரைதரிசனம் செய்தனர். இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசன பாதையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நோய் தொற்று முற்றிலும் குறைந்துவிட்டபோதிலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கும்படி பக்தர்கள் அறிவுறுத்தப் பட்டனர்.


Tags : Editani ,Murugan , Many devotees visit the Thiruthani Murugan Temple
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து